Thursday, 18 June 2020

நுகர்வோர் - ஒருஅறிமுகம்

உலகச்  சந்தையில் தினசரி  வாழ்விற்கு தேவையான பற்பசை தொடங்கி பல்வேறு வணிகபொருட்கள் பற்பல முத்திரைக் குறிகளோடு  வலம் வருகின்றன.வாழ்வின் தேவைகளை பூர்த்திசெய்யும்  பொருட்டு தன்  சொந்த உபயோகிப்பிற்காக பொருள்/சேவை பெறுபவரே   "நுகர்வோர்" ஆவர். அந்த விதத்தில் நாம் அனைவரும் உலகசந்தையின் நுகர்வோர்கள் தாம்.இக்கட்டுரையில் "நாம்" என்பது நுகர்வோராகிய நம்மையே  குறிக்கும். ஒரு சந்தையில் குவிந்திருக்கும்  பலதரப்பட்ட  பொருட்களிடையே  தேவைக்கு தேர்வு  செய்து முடிவெடுப்பது நுகர்வோராகிய  நாம்  தான்.நமக்கு உரிமைகளாடு கூடிய கடைமைகளும் இருக்கின்றன.ஒரு நுகர்வோராக வகிக்கவேண்டிய  பொறுப்புகள்  மற்றும் உரிமைகளை காண்போம்.

 நுகர்வோரின் கடமைகள்

"கடமை இல்லையேல் உரிமை இல்லை" என்பதற்கிணங்க முதலில் கடமைகளில்  தெளிவுற வேண்டும்.
ஒரு பொருளை வாங்குவதற்கு முன் நமக்குள் கேட்க வேண்டிய கேள்விகள்
Ø  இப்பொருளை வாங்குவதற்கான தேவை இருக்கிறதா?
Ø  எவ்வளவு காலம்  பயன்படுத்துவது?      
Ø  அவ்வளவு காலம் உழைக்கும் ஈன எதிர்பார்க்கிறோமா ?

பொதுவாக நாம் வாங்கும் பொருட்களை மூன்று கோணங்களில்  பார்த்தல் அவசியம். உடல்நலத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் உகந்ததா மற்று சரியான தேவைக்குதானா என்று ஆராயவேண்டும். உதாரணத்திற்கு, அனைவருக்கும் முதல் தேவையான உணவை எடுத்துக்  கொள்வோம்பதப்படுத்தப்பட்டு பொட்டணமிடப்பட்ட பதார்த்தங்கள், "ஆர்கானிக்என்று பிரெத்யேகமாக குறிப்பிடப்படும் உணவுபொருட்கள் என ஏராளமாக தாராளமாக கைவசம் கிடைக்கின்றன.விளம்பரங்களினால் வசீகரிக்கப்பட்டு தேவையிலிருந்து திரிந்து குழம்புவதும் உண்டு.  

உணவு காப்புறுதி அடைவதற்கு பொருட்களை தேர்வு       சில அடிப்படை குறிப்புகள்



1. உணவுபாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின் கீழ் (FSSAI,2006) உணவு பொருளின் விவரச்சீட்டில் (label) இடம் பெற்றிருக்க வேண்டியவை:
Ø  FSSAI உரிமஎண்
Ø  உற்பத்தியாளரின்  விவரம்
Ø  உற்பத்திதேதி (Date of manufacture)
Ø  கால எல்லை கடப்பு  தேதி (Expiry date)
Ø  அனைத்து சேர்மம்,
Ø  ஒவ்வாமை காரணிகள் பற்றியஎச்சரிக்கை குறிப்புகள் (ஏதேனும்இருந்தால்)
Ø  சைவ/அசைவ குறியீடுகள்
Ø  கதிரியக்க குறியியீடு (ஏதேனும் இட்டுருந்தால்)
Ø  வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் பொதுச்செய்தி. (-டு, "பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே 4 மாதங்களுக்கு சிறந்தது" என்ற Cerelac உள்ள அறிவிப்பு)
இத்தகவல்களை கவனித்து வாங்கவேண்டும்,

2."ஆர்கானிக்"என்று குறிப்பிட்டிருக்கும் பொருட்கள் உரியதரசான்றுதளை பெற்றிருக்க வேண்டும்.
3. புட்டிகளில் வரும் குடிதண்ணீர் ISI முத்திரை பெற்றிருக்கவேண்டும்
4.இறக்குமதி செய்யப்படட உணவுகளில் இறக்குமதியாளரின் முழுவிவரமும் இடம் பெற்றிருக்க வேண்டும்,
5.பழசாறுபற்றும்இதரபொருட்கள்FPO தரகட்டுப்பாட்டுக்குள்இருக்கவேண்டும்.
6.






இத்தககைய பொதுவான விழிப்புணர்வுடன் பொருட்களை தேர்வு செய்தல் நம்  தேர்வினை செம்மைப்படுத்தும். அதே போன்று எந்த பொருளையும் உபயோகபடுத்திய பின் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் பழகியிருக்கவேண்டும்.

உரிமைகள்:

இந்திய அரசியலமைப்புச் சட்ட்தின்கீழ் நுகர்வோர்  நலன் கருதி "நுகர்வோர்
பாதுகாப்பு சட்டம் “(1986) அமல்படுத்தப்பட்டது
இச்சட்டதின் வாயிலாக  நுகர்வோரின் கீழ்கண்ட உரிமைகள் உறுதிசெய்யப்படுகிறது.

1.நுகர்வோர் பாதுகாப்புரிமை
உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்கள்/சேவைகளை சந்தைப்படுத்துதலில் இருந்து பாதுகாக்கப்படுத்தல்.

2.தகவல் அறியும் உரிமை
ஒரு பொருளின்  விலை, தரம், தூய்மை, எடை, செறிவு குறித்து அறிதலின்  மூலமாக நியாயமற்ற வர்த்தக செயல்களிலிருந்து பாதுகாக்கப்படுதல்

3.தேர்ந்தெடுக்கும்உரிமை
கூடுமானவரை பலதரப்பட்ட பொருட்கள்/சேவைகள் போட்டிக்குரிய விலை  வகையில் கைவசம் கிடைக்க  நிச்சயப்படுத்தல்,

4.செவியேர்க்கப்படும்உரிமை
நுகர்வோரின் குறைகள்  மற்றும் புகார்களை பயமோ தயக்கமோ இன்றி வெளிப்படுத்தவும் அவர்களது விருப்பங்களை  மதிக்கும் உரிய மன்றங்கள்மூலம்  நம்பிக்கையளித்தல்

5.குறை நிவர்த்தி உரிமை
நியாயமற்ற மற்றும்  தடை  செய்யப்பட்ட வர்த்தக முறைகேடுகள்,சமூக அநீதியில் இருந்து நிவர்த்தி அளித்தல். இவ்வுரிமையை பாதுகாக்க  தேசிய நுகர்வோர் ஆணையத்த்தின்கீழ்  மாநில மற்றும்  மாவட்ட அளவிலான மன்றங்கள்  நிறுவப்பட்டுள்ளன.

6.நுகர்வோர் கல்விக்கான உரிமை
நுகர்வோர் பாதுகாப்பு  சட்டத்தை அறிந்து கொள்ளுதல்.
"நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (1986)”: முக்கிய அம்சங்கள்
சட்ட சிக்கல்களும் நெடிய நீதிமன்ற முறைகளும் தற்போது இலகுவாகிட்டது.Cmputerization & computer Networking of Consumer forums in Country( இத்திட்டத்தின் கீழ்  35 மாநில ஆணையமும், தமிழ்நாட்டில்  30  மாவட்ட அளவிலானமன்றங்கள்  நிறுவப்பட்டுள்ளன .

Ø  மாவட்ட நுகர்வோர் மன்றத்தின் உறுப்பினராக பயன்பெறலாம்.

Ø அரசினால் நிர்வகிக்கப்படும் 24*7 உதவிஎண்1800-425-00333 மூலம்  நுகர்வோர் தொடர்பான எந்த தகவலையும் உதவியையும்பெறலாம்

Ø  நுகர்வோர்கள் தங்களது  இணையவழி புகார்களை சுயமாகவோ  அல்லது  www.consumerdaddy.com போன்ற தன்னார்வ நிறுவனங்களின் மூலமாகவோ அளிக்கலாம்புகார்களை உடனக்குடன்  பரிசீலிப்பதில்  இம்மாதிரியான நிறுவனங்கள் ஆவணசெய்கின்றன.

Ø  மேலும்விபரங்களுக்கு  consumerhelpline.gov.in                                    அணுகலாம்..


உலக நுகர்வோர்  உரிமைகள் தினம்

1962 March 15 இல் அமெரிக்க அதிபர் JohnF.Kennedy  நுகர்வோர்களுக்கான உரிமை மற்றும்  கொள்கைளின் ஒட்டுமொத்த  வடிவத்தையும் அமைத்தார். உலக நுகர்வோர்கள் தினம் மார்ச் 15, 1983 முதல்  அனுசரிக்கப்படுகிறது. இன்றைய காலச்சூழலில் உலகமயமாக்கலைத் தொடர்ந்து "சர்வதேச நுகர்வோர்மயம்" என்கிற சொல்லும் வழக்கில்உள்ளது. 92 நாடுகளிலுள்ள 200கும் மேற்படட      அமைப்புகள் இணையும்  கூட்டமைப்பாக Consumer International  செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும்  உலகநுகர்வோர்களுக்கு தேவையான முக்கிய  பயன்களை முன்வைத்து பல வழிமுறைகளின் மூலம் இலக்கிணை முன் நகர்த்துகிறது. . 2017 ஆம் ஆண்டிற்க்கான இலக்கு "#Better digital world”.
கருத்துரு- " Buliding  a Digital  World that consumers can trust".

ஒரு நுகர்வோராக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுடன் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால்,நம் உரிமைகள் காக்கப்படுவதோடு சமுதாயமும் சீரோடு வளரும்.







No comments:

Post a Comment