Thursday, 2 April 2015

தொடரும் காத்திருப்பு


அனிச்ச மலர் கரங்கள் காத்திருப்பை கட்டி கொண்டன கண்ணிமை சிறகடிப்பில் தனிமையை கரைத்து இதயம் சிறு ஈரமானது காற்றிலாடும் காகிதமாய் ஏக்கம் சிறகடித்தது கண்களில் தேக்கிவைத்த நாளை கனவுகள் நிலவின் முதுகாய் முன்வர முரண்டது
வெம்ைம  ஓழுகும் வினாடிகளிலும்,நிலா தூங்கும் இரவுகளிலும் - உள்ள ோளி ஓளிர்ந்தது முள் வேலியையும் முன்னேறி நம்பிக்கை அலை புரண்டு நிகழ்கால பாலையை நனைக்க...ெதிர்வரும் வசந்தத்தை நோக்கி ெதன்றல் மூச்சாய் .. தொடரும் இவள் காத்திருப்பு..

Wednesday, 18 February 2015

நெஞ்சு பொருக்குதில்லையே



சின்ன சின்ன கனவு பூக்களை
இதய பையில் சுமந்து கொண்டு
புத்தகத்தோடு பழக வேண்டிஅ நாட்களில்
பட்டாம்பூச்சி பிடிக்கும் கைகளில்
                       எச்சில் இலை!!
கற்களை தலையில் வைத்து
கொண்டாடும் பூக்களின்
காட்சி கண்களை குத்தி
இதயத்தை துளைக்கும் பொழுதுகளில்…
                       நெஞ்சு பொருக்குதில்லையே!!!
தாய்ப்பாலில் களங்கமில்லை
உதிரத்தில் உயர்வு தாழ்வில்லை
கண்ணீரில் கரையில்லை
கருவறையில் சாதியில்லை
கடவுள் கருங்கல்லில்லை
மாந்தர் தம் மனதில் எறியும் தீயினால்
சாம்பலாகிப் போகும் ஈழத்தமிழர்களின்
உதிரத்தில் உயிர் நனைக்கும் பொழுதுகளில்…
                       நெஞ்சு பொருக்குத்தில்லையே!!!

பெண்மை – மென்மை;
பெண்மை – பொருமை;
பல “மை”கள் பொய்மை ஆகிப் போயின
பெண்மை வன்மை ஆகிப் போனது!!
விண்ணைத் தொடும் சிறகுகளை
வேரோடு கிள்ளி வீட்டு மூலையில்
உட்கார வைத்து அழகு பார்க்கிறது ஆண்மை
ஆண்மையின் இலக்கணம் எப்பொழுது..??
காம மிருகத்தின் கொரூரத்தால்
வயது வரம்பில்லாமல் வதைக்கபடும்
வலி….விளக்க வார்த்தைகளின்றி
செத்தும் போய் வாழ்கின்ற பொழுதுகளில்…
                       நெஞ்சு பொருக்குதில்லையே.!!!

சின்ன சின்ன தோல்விகள்
தழுவிக் கொள்ளும் போது
தோலிவிக்கு தம்மை தாரை வார்த்து
தரும் தற்கொலைகள்
                       நெஞ்சு பொருக்குதில்லையே.!!!

காவி உடையை கரை செய்யும் ஆசாமிகள்
கடவுள் பெயரில் காசு குடை பிடிப்பவர்கள்
நேசிக்க மறக்கும் மனித இதயங்கள்
பாரினில் காற்றோடு கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியுடன் எதோ
ஓர் இதய்த்தொடு துடித்து கொண்டிருக்கிறது…
                       நெஞ்சு பொருக்கிதில்லையே.!!!











                      


Friday, 6 February 2015

கனவின் கதை



                       
                       
                       '"கண்கள் கதை பார்க்க
                       கனவை துரத்தியதில் குறுநகை திரட்டி
                       இமைக் கதவில் தாழிட்டு கொண்டாள்
                       இருள் அறையில் நிலவோடு
                       விரல் கோர்த்து துணை சேர்த்தாள்
                       கதிர் தொட்டு இமை திறக்க
                       நிலவின் முதுகாய் தினமொரு
                       புதிர் போட காத்திருந்தாள் ...!”
                      

என் நிமிட நிரப்பு


                       







                       ”பனிக் குமிழில் விழும்

                         பனை நிழல் போல்

                       மன சூழியில் உன் பிம்பம்

                         கணப் பொழுதில் விழுந்து

                       நிழலாட நிஜமான என் நிமிடஙள்

                               கனலாய் கொதித்ததே"...!

Friday, 23 January 2015

தனிமையின் துணை



   "நிலா - நீல வானம் ;

நட்சத்திரங்களாய் நாம்

ஒவ்வொருவரும் தனித்தனியாய்

ஓர் துணையைத் தேடி நாட்களோடு நகர்கிறோம்

ஒவ்வொர் நிமிடமும் தனிமையை

நம் கண் இமைச் சிறகடிப்பில் கரைக்கின்றோம்

மழலையின் குறும்புச் சிரிப்பாய்

நம் நிழலோடு வாழ்ந்து

நமக்கு நம்மை காட்டுகிறது

                                                       - தனிமை…!”